Skip to content
Ilayathalapathy Vijay's Bairavaa Movie Wrap Up
Images1 min read

Ilayathalapathy Vijay's Bairavaa Movie Wrap Up

Bairavaa
Bairavaa

எங்க வீட்டு பிள்ளை , உழைப்பாளி , நம்மவர் , தாமிரபரணி , படிக்காதவன் , வேங்கை ,வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட வெற்றி படங்களை தயாரித்த பாரம்பரிய நிறுவனமான நாகி ரெட்டியின் நல்லாசியுடன் B. வெங்கட்ராம ரெட்டி வழங்க விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில், பரதனின் கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில், இளையதளபதி விஜய் நடித்திருக்கும் “பைரவா “ படத்தின் படப்பிடிப்பு .29.11.2016 நேற்று “ பூசணிக்காய் “ உடைப்புடன் இனிதே நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் இளையதளபதி விஜய் , தயாரிப்பாளர் B .வெங்கட்ராம ரெட்டி , B. பாரதி ரெட்டி , இயக்குநர் பரதன் , ஒளிப்பதிவாளர் சுகுமார்,எடிட்டர் பிரவீன் ,கலை இயக்குனர் பிரபாகரன் தலைமை நிர்வாகி ரவிச்சந்திரன்,முதன்மை நிர்வாகி குமரன் மற்றும் படகுழுவினருடன் “ பைரவா “ திரைப்படத்தை தமிழ் நாடு முழுவதும் வெளியிடும் ஸ்ரீ கிரீன் புரொடக்க்ஷன்ஸ் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள் . கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் , ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி,தம்பிராமையா ,சரத் லோகிதா ஸ்வா , சதிஷ்,அபர்னா வினோத் ,சிஜு ரோசலின், பாப்ரி கோஷ், மைம் கோபி , ஸ்ரீமன் ஆகியோர் மிக முக்கியாமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

முதல் முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இளையதளபதி விஜய் படத்திற்கு இசை அமைத்துள்ளார் அணைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி இருக்கிறார்.

பைரவா திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் பணி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவரவுள்ளது.

Director Bharathan, Vijay, M. Sukumar Cinematographer and the team Bairavaa Movie Wrap Up Stills#1
Director Bharathan, Vijay, M. Sukumar Cinematographer and the team Bairavaa Movie Wrap Up Stills
Director Bharathan at Bairavaa Movie Wrap Up Stills#2
Director Bharathan at Bairavaa Movie Wrap Up Stills
Pin it
Bairavaa

Featured Film

Bairavaa

LanguageTamil
ReleaseJan 12, 2017
Rating5.6 / 10

Bairavaa is a 2017 Indian Tamil-language action thriller film directed by Bharathan. It stars Vijay as the titular debt collector, alongside...